Showing posts with label குழந்தையின் உணவு. Show all posts
Showing posts with label குழந்தையின் உணவு. Show all posts

Friday, November 13, 2015

குழந்தை வளர்ப்பும் பழக்கவழக்கமும் | பாபு நடேசன்

அனைவருக்கும் வணக்கம் 

இந்த பகுதி குழந்தை வளர்ப்பு பற்றி பொதுவான கருத்தை பதிவு செய்வதாகும் | ஏதேனும் குறைகள் இருப்பின் பின்னூட்டத்தில்  தெரிவிக்கவும் 

குழந்தைப் பருவத்தில் அவர்களை வளர்க்கும் விதம்தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது, குழந்தைகள் சிலவற்றை பார்த்து கற்றுக்கொள்ளும் சிலவற்றை அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் பொது இடங்களில், உறவினர்கள் வீட்டில் , தொலைகாட்சிகளில் சில நல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறது. பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டும். 

இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கமுடியும். குழந்தைகளை பயப்படும்படி செய்ய வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருங்கள் அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். கண்டிப்பாக மாறிவிடுவார்கள்.


குழந்தைகளை அதிகம் தொலைகாட்சி பார்க்க அனுமதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளும். எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை தொலைகாட்சி பார்க்க வைப்பதை விட, சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழுங்கள். மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள்.



குழந்தைகளுக்கு ஒரு சில விசயங்களை சொல்லிக் கொண்டேயிருங்கள் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்ல வேண்டும், பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து மட்டும் தான் செல்லவேண்டும், ஏன் சீருடை அணிகிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டை கூறுங்கள், பள்ளியின் வீட்டுப் பாடத்தை ஒரு குறிப்பிட்ட நேரப்படி முடிக்க கற்றுக்கொடுங்கள்.


 












தப்பு செய்வது மனித இயல்பு; தப்பு செய்யும் போது அன்புடன் கண்டியுங்கள், போக போக அவர்களை மாற்றம் பெறுவார்கள், பயம் கொள்ள வேண்டாம்.  
 
குழந்தைகளுக்கு படுக்கைக்கு செல்லும்போது கதைகளை சொலுங்கள், சொல்லப்படும் கதைகளில் அறிவு, வீரம், நீதி, தைரியமிக்க கருத்துக்கள் கதைகளை சொல்லுங்கள். இதனால் குழந்தைகளின் கற்பனை திறம் அதிகரிக்கும். நுண்ணறிவு திறனும் வளரும்.


நல்ல அறிவுள்ள தமிழ் கதைககளை படிக்க இங்கே செல்லுங்கள் [தமிழ் அறிவு கதைகள் [{http://tamilarivukadhaikal.blogspot.in}]
இன்னும் நிறைய இருக்கிறது, அடுத்த வாரம் சிந்திப்போம் 
தொகுப்பு:-
பாபு நடேசன்


Tuesday, July 24, 2012

ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு) 1 வயது முதல்

ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு)

பரிமாறும் அளவு : முன்று குழந்தைகளுக்கு
  • ஆப்பிள் - இரண்டு
  • கிஸ்மிஸ் பழம் - கால் கப்
  • கெட்டியான பால் - ஒரு கப்
  • தண்ணீர் - கால் கப்
  • ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
  • முந்திரி, பாதம், பிஸ்தா, அக்ரூட் - தலா இரண்டு
  • சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
  • சப்ரான் - ஒரு பின்ச்
ஆப்பிளை தோலெடுத்து பொடியாக நறுக்கி அதில் கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட்டை வெந்நீரில் ஊறவைத்து தோலெடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
வேக வைத்த ஆப்பிள், கிஸ்மிஸை நன்கு மசித்து பால் சேர்த்து ஏலக்காய், சப்ரானும் சேர்த்து நன்றாக வேகவிட்டு வற்ற விடவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

குறிப்பு :
இதில் பால், ஆப்பிள், நட்ஸ் எல்லாமே குழந்தைகளுக்கு சத்து தான் வாரம் ஒரு முறை செய்து கொடுக்கலாம். நல்ல போஷாக்கான ஹல்வா இதை ஒரு வயது குழந்தையிலிருந்து கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்தும் கொடுக்கலாம். ஆனால் வாயில் தட்டாமால் நல்ல மசிந்து இருக்கனும். பல் உள்ள பிள்ளைகள் என்றால் நட்ஸ் வகைகள் இன்னும் கொஞ்சம் நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

வாழை பழ ஹல்வா(குழந்தைகளுக்கு) 1 வயது முதல்

  • ரவை - 100 கிராம்
  • சர்க்கரை - 100 கிராம்
  • வாழைப்பழம் - இரண்டு
  • நெய் (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
  • பால் - 50 மில்லி
  • தண்ணீர் - கால் கப்

ரவையை ஒரு மேசைக்கரண்டி பட்டரில் நன்கு வறுத்து எடுக்கவும்.
தண்ணீர் மற்றும் பாலில் வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க விட்டு ரவையும் தூவி கிளறி சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும். கடைசியில் மீதி நெய் (அ) பட்டரை சேர்த்து கிளறி ஒட்டாமல் ஹல்வா பததிற்கு வரும் போது இறக்கவும்.

குறிப்பு:
இது ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கான உணவாகும். தேவைப்பட்டால் கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)

குழந்தை ஆரோக்கியமாக வளர சுற்றமும் தாயன்பும் சத்தான உணவும் முக்கியம், குழந்தை இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)
  • பாதாம் - 2
  • பிஸ்தா - 2
  • டேட்ஸ் - 2
  • அக்ரூட் - 2
  • திராட்சை - 2
  • முந்திரி - 2
  • பால் - தேவைக்கு
இவை அனைத்தையும் பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் அவற்றை பேஸ்ட் போலவோ அல்லது நீர்க மில்க் ஷேக் போலவோ அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு:
மருத்துவர் 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை தினமும் ஒரு முறை கொடுக்க சொல்கிறார். இது குழந்தைகளின் உடலை ஆரோகியமாக வைக்குமாம். அதே போல் 8 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளின் உணவில் அவசியம் 1 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணை சேர்த்து விட வேண்டும்.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)


குழந்தைக்கு எதை செய்துக் கொடுத்தாலும் அதனுடன் பொருமையையும் தங்களின் விலைமதிப்பில்லாத தாயன்பையும் சேர்த்து கொடுங்கள்.

குழந்தையை வளர்க்கும் தாய்,  சமூக பிரச்சினையையோ, குடும்ப பிரச்சினையையோ பற்றி கவலை படகூடாது. நீங்கள் உண்டு உங்கள் குழந்தை உண்டு என இருக்க பழகுங்கள். உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)

பரிமாறும் அளவு : 2

  • கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
  • சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் சர்க்கரை (தேவைப்பட்டால்) சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

குறிப்பு : உடலிற்கு மிகவும் நல்லது. 

Tuesday, February 28, 2012

குழந்தையின் உணவு - 6 மாதம் முதல்

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கோ 6 மாதங்களுக்கோ பின்னரே திட உணவு கொடுப்பது ஆரோகியமானது. குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கே எழுதுகிரேன்

6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது இனி ஒரு வேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றாமல் போகிறது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை,ஆரோகியம் கொன்டு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்னு சொல்வார்கள்....


திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா தேவையில்லை பசும்பாலே போதும்..பசும்பாலை 1 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க அவசியம் இல்லை..முழு பாலாக மட்டும் குழந்தைக்கு குடிக்கக் கொடுக்க மட்டுமே ஃபார்முலா கொடுக்க வேன்டும் மற்ற படி திட உணவுக்கு சிறந்தது பசும்பால். உணவைக் குழந்தைக்கு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் ஆக்கி(ஆப்பம் மாவு பதத்திற்க்கு) கொடுக்கலாம்..

பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ உடைத்து விட்டு கொடுக்க வேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்க்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு அப்படியே சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட பழக்க வேன்டும்.

திட உணவாக கொடுக்கத் துவங்கும்பொழுது குழந்தைக்கு பழக்க ஏற்றது மசித்த பழ வகைகள்
வாழைபழத்தை நன்கு கட்டியில்லாமல் ஃபோர்கால் உடைத்து பால் கலந்து கொடுக்கலாம்..1/4 பாக பழத்தை மட்டும் முதல் நாளில் கொடுத்து பின் மெல்ல தினமும் 1 பழமாக கொடுக்கலாம்
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேகவைத்து உடைத்து பாலுடன் கலந்தோ இல்லை அப்படியே கொடுக்கலாம்.

பின் சீசனுக்கு ஏற்றவாரு பியர்ஸ் பழத்தை ஆப்பில் போலவே வேகவைத்து கொடுக்கலாம்
சப்போட்டாவை குழந்தை விரும்பி சாப்பிடும்..நல்ல சத்துள்ள பழவகை அது. அதனையும் உடைத்துக் கொடுக்கலாம்...constipation க்கு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

Monday, February 27, 2012

குழந்தையின் உணவு | 0-12 மாதம்

வணக்கம்

குழந்தை பிறந்து ஆறாவது மாதத்தில் என்ன திட உணவு கொடுக்கலாம் என குழப்பம் ஏற்படும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் அமைந்த வலைப்பூ


விரைவில்....!